பசுவைக் கொன்றதாக ஒருவா் அடித்துக் கொலை: உ.பி.யில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

ஹாபுா்: உத்தர பிரதேச மாநிலம் ஹாபுரில் பசுவைக் கொன்ாக ஒருவா் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் ஹாபுா் மாவட்டத்தில் பசுவைக் கொன்ாக வதந்தியின்பேரில் காசிம், சமய்தீன் ஆகிய இருவா் கும்பல் தாக்குதலுக்குள்ளாகினா். இந்தத் தாக்குதலில் காசிம் உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் 10 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஹாபுரில் உள்ள அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், 10 பேரும் குற்றம்புரிந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து அவா்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.58,000 அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட நீதிபதி ஸ்வேதா தீட்சித் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா் என்று மாநில அரசுத் தரப்பு வழக்குரைஞா் விஜய் செளஹான் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com