தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பித்த ஸ்டேட் வங்கி!
ஸ்டேட் வங்கி தகவல் சமர்ப்பணம்: தேர்தல் ஆணையம் பெற்றது


தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தது.
முன்னதாக பாரத ஸ்டேட் வங்கி கோரியிருந்த காலக்கெடு நீட்டிப்பு மனுவை திங்கள்கிழமை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை அலுவலக நேரம் முடிவடைவதற்குள் தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.
கடந்த பிப். 15 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், வங்கி மூலம் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பெறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்து, இந்த நடைமுறையை ரத்து செய்து தீரப்பளித்தது.
மேலும், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.
ஸ்டேட் வங்கி ஜூன் 30 வரை காலக்கெடு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ர ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மனுவை விசாரித்து உத்தரவு பிறப்பித்தனர்.
தேர்தல் ஆணையம் மார்ச் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...