காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்... மல்லிகார்ஜுன கார்கே வாக்குறுதிகள்!

அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் 43 வேட்பாளர்கள் அறிவிப்பு.
செய்தியாளர் சந்திப்பில் மல்லிகார்ஜுன கார்கே
செய்தியாளர் சந்திப்பில் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பல்வேறு துறைகளிலுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 43 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக ஏற்கெனவே 39 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்தது காங்கிரஸ். விவசாயிகளின் விலைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் காங்கிரஸ் சட்டம் இயற்றும் என்பது காங்கிரஸ் அளிக்கும் வாக்குறுதி.

ஆதிவாசி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பழங்குடி மக்கள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகின்றனர். அவர்களின் நிலங்கள் அபகறிக்கப்படுகின்றன. ஒப்பந்த தொழிலாளர்களாக அழைத்துச்செல்லப்படுகிறார்கள். ஆனால், இவை நடக்காதவாறு காங்கிரஸ் அவர்களின் உரிமையை பாதுகாக்கும்.

பெரும் தொழில் நிறுவனங்களைக் கட்டமைக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்தான். ஆனால், அதன் பெருமைகளை காங்கிரஸ் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. வேலைவாய்ப்புத் துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவோம். இளைஞர்களின் எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com