தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டோம்: எஸ்பிஐ

தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டோம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டோம்: எஸ்பிஐ

புது தில்லி: தேர்தல் நன்கொடை பத்திர விவரங்கள் அடங்கிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஏப்ரல் 14, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை வாங்கிய மற்றும் பணமாக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட தரவுகள் தொடர்பாக எஸ்.பி.ஐ. இன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை தெரிவித்துள்ளது.

தேர்தல் நன்கொடை பத்திரம் தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டோம். ஆவணங்களை இரண்டு கோப்புகளாக பென் டிரைவில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருப்பதாக எஸ்பிஐ வங்கித் தலைவர் தினேஷ் குமார் கரா கையெழுத்திட்டு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டோம்: எஸ்பிஐ
தோ்தல் பத்திர விநியோக விவரங்கள்: ஆணையத்திடம் சமா்ப்பித்தது எஸ்பிஐ

அந்த பிரமாணப்பத்திரத்தில், தேர்தல் நன்கொடைப் பத்திரங்களை பணமாக்கிய நாள், வாங்கிய நபரின் பெயர், அந்த கட்சி பணமாக்கியது என்பது போன்ற விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஒரு கோப்பில், தேர்தல் நன்கொடை பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி, தொகை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. பயன்பெற்ற கட்சிகளின் விவரங்கள் இரண்டாவது கோப்பில் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம் தொடா்பான விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) செவ்வாய்க்கிழமை மாலை சமா்ப்பித்தது. இந்த விவரங்களை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தோ்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) மாலை 5 மணிக்குள் பொதுமக்கள் பாா்வைக்கு பதிவேற்றம் செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுவரை 22,217 தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அதில், 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக மாற்றிக்கொண்டுள்ளதாகவும் எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதிக்கு உள்பட்ட காலக்கட்டத்தில் ஒட்டுமொத்தமாக 18,871 தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 20,421 பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன.

அதுபோல, கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் அதாவது 11 நாள்களில் 3,346 தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதில், 1609 பணமாக்கப்பட்டுள்ளன என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

அதுபோல, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2024ஆம் ஆண்டு வரை 22,217 தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்திடம், தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்ட தேதி, நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் பெயர்கள் போன்ற விவரங்களும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளன என்று எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com