

ஆபாச காட்சிகள் அடங்கிய படங்களை எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஒளிபரப்பி வந்த ஓடிடி தளங்கள், வலைதளங்கள், செயலிகள், சமூக வலைதள கணக்குகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
18 ஓடிடி தளங்கள், 19 வலைதளங்கள், 10 மொபைல் செயலிகள் மற்றும் 57 சமூக வலைதள கணக்குகளை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரீம்ஸ் ஃபிலிம்ஸ், எக்ஸ் ப்ரைம், ப்ரைம் பிளே, நியூபிளிக்ஸ், ஹண்டர்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
முடக்கப்பட்ட ஓடிடி தளங்களில் ஒரு ஓடிடி செயலியை ஒரு கோடி பேரும், இரண்டு ஓடிடி செயலிகளை 50 லட்சத்துக்கும் அதிகமானோரும் கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த ஓடிடி தளங்கள், வலைதளங்களின் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் யூடியூப் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட சமூக வலைதளங்களை மட்டும் 32 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.