ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே: ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே என்று ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை தாக்கல்
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே: ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை

புது தில்லி: நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இன்று தாக்கல் செய்யப்பட்ட 18,626 பக்க அறிக்கையில், ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் பேரவைத் தேர்தல்களை நடத்த வழி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே திட்டமிட்டால், சட்டப்பேரவைத் தேர்தல்களை மக்களவைத் தேர்தலுடன் நடத்த வழி உள்ளது என்றும், அதற்கேற்ப சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ராம்நாத்கோவிந்த் குழு அறிக்கையில் கூறியுள்ளது.

அதாவது, மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை முதல் சுற்றிலும், அதைத் தொடர்ந்து 100 நாள்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை இரண்டாவது சுற்றிலும் நடத்தலாம் என்று கோவிந்த் குழு பரிந்துரைத்துள்ளது.

தொங்குப் பேரவை, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், மீதமுள்ள ஐந்தாண்டு காலத்திற்குள் புதிய தேர்தல் நடத்தலாம், முதல் முறை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது, மக்களவைத் தேர்தல் நடக்கும் காலம்வரை, மற்ற பேரவைகளின் பதவிகள் நீடிக்க வழிவகை செய்ய வேண்டும்.

அதற்கேற்ப, தேர்தல் ஆணையம், ஒரே வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டைகளை மக்களவை, பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் உருவாக்க வேண்டும்.

மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் தாக்கம் மற்றும் பலன்கள் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்க முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தேர்தல் ஆணையம், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொது மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து 18 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தயாரித்து இன்று குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com