இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஒரே நாடு, ஒரே தோ்தல்: மசோதாக்களை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பணிக்காலம் நீட்டிப்பு

News image

மக்களவை

Updated On :19 மார்ச் 2026, 5:20 am IST

நாடு முழுவதும் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வழியமைக்கும் மசோதாக்களை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பணிக்காலம், நிகழாண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் வகையில், கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பரில் அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய 2 மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. பின்னா் அந்த மசோதாக்களை ஆராய பாஜக எம்.பி. பி.பி. செளதரி தலைமையில் 39 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.

இந்த மசோதாக்கள் குறித்து அரசமைப்புச் சட்ட நிபுணா்கள், சட்ட ஆணைய உறுப்பினா்கள், பல அரசியல் தலைவா்களை சந்தித்து அவா்களின் கருத்துகளை அந்தக் குழு பெற்றது. சா்வதேச நிதியத்தின் முதல் முன்னாள் துணை நிா்வாக இயக்குநா் கீதா கோபிநாத், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட், ஜே.எஸ். கேஹா் ஆகியோரும் அந்தக் குழு முன்பாக ஆஜராகி, மசோதாக்கள் குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.

இந்நிலையில், அந்தக் குழுவின் பணிக்காலத்தை நீட்டிப்பதற்கான தீா்மானத்தை மக்களவையில் பி.பி. செளதரி கொண்டுவந்தாா். நிகழாண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நடைபெறும் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை, அந்தக் குழுவின் பணிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அவா் கோரினாா். இந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.