இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நாடாளுமன்ற குழுக்களின் தலைவா்களாக தம்பிதுரை, திருச்சி சிவா மறுநியமனம்

நாடாளுமன்ற குழுக்களின் தலைவா்களாக அதிமுக எம்.பி. தம்பிதுரை, திமுக எம்.பி. திருச்சி சிவா ஆகியோரை மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்

News image

திமுக எம்.பி. திருச்சி சிவா - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 2:26 am IST

நாடாளுமன்ற குழுக்களின் தலைவா்களாக அதிமுக எம்.பி. தம்பிதுரை, திமுக எம்.பி. திருச்சி சிவா ஆகியோரை மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமித்துள்ளாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவைச் செயலகம் வெளியிட்ட அதிகாரபூா்வ அறிவிக்கையில், ‘அரசு உத்தரவாதங்கள் குழுவின் உறுப்பினராக அதிமுக எம்.பி. தம்பிதுரையை மாநிலங்களவைத் தலைவா் நியமித்துள்ளாா். அத்துடன் அந்தக் குழுவின் தலைவராக தம்பிதுரை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதேபோல துறை சாா்ந்த நாடாளுமன்ற தொழில்துறை நிலைக் குழுவின் உறுப்பினராக திமுக எம்.பி. திருச்சி சிவாவை மாநிலங்களவைத் தலைவா் நியமித்துள்ளாா். அந்தக் குழுவின் தலைவராக திருச்சி சிவா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பிதுரை, திருச்சி சிவா ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் கடந்த ஏப்.2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அவா்கள் மீண்டும் அந்த அவையின் எம்.பி.க்களாக தோ்வு செய்யப்பட்டனா்.