பேடிஎம் வங்கி இன்று முதல் செயல்படாது!- 20% ஆட்குறைப்பா?

இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த வங்கி சார்ந்த சேவைகளை வெள்ளிக்கிழமை (மார்ச் 15) முதல் நிறுத்தியுள்ளது.
பேடிஎம் வங்கி இன்று முதல் செயல்படாது!- 20% ஆட்குறைப்பா?

பெங்களூரு: இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த வங்கி சார்ந்த சேவைகளை வெள்ளிக்கிழமை (மார்ச் 15) முதல் நிறுத்தியுள்ளது.

இதன் விளைவாக, பணம் செலுத்தும் நிறுவனமான பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியில் சுமார் 20 சதவீதம் ஊழியர்கள், குறைந்தது 550 ஊழியர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியில் கடந்த ஆண்டு வரை 2,775 பணியாளர்கள் இருந்தனர். வங்கி தொடர்ந்து விதிமீறளில் ஈடுபட்டு வந்த காரணத்தை மேற்கோள்காட்டு வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த சேவைகளுக்கு கடந்த மாதம் ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வங்கிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால், கடந்த மாதம் நிறுவன கூட்டம் ஒன்றில் பேசிய பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் இருக்காது என்று ஊழியர்களுக்கு உறுதியளித்தபோதும் தற்போது ஆட்குறைப்பு அறிவிப்பு வந்துள்ளது.

நிறுவனத்தில் ஆண்டு கட்டண மதிப்பீட்டு சுழற்சி மட்டுமே நடந்து வருவதாகவும், வங்கிப் பிரிவு மட்டுமே ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் என்று விவரம் தெரிந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மூடப்படுவதற்கு முன்னதாக, பல்வேறு வங்கிகள் மூலம் அவற்றின் வாடிக்கையாளா்கள் யுபிஐ முறையில் பணப் பரிவா்த்தனை செய்ய உதவும் 3-ஆம் தரப்பு சேவை வழங்குநராக (டிபிஎபி) செயல்படுவதற்கு பேடிஎம் செயலியின் உரிமையாளரான ஒன்97 நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் பேடிஎம் யுபிஐ சேவைகளை தொடர்ந்து வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் வங்கி இன்று முதல் செயல்படாது!- 20% ஆட்குறைப்பா?
இறந்தும் வாழும் தந்தை! குழந்தையை மகிழ்வித்து நன்றி செலுத்திய மருத்துவமனை!!

அதாவது, பாரத ஸ்டேட் வங்கி, யெஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை பே-டிஎம் செயலியின் பணப் பரிவித்தனைக் கட்டமைப்பு வழங்குநா்களாக (பிஎஸ்பி) செயல்படவுள்ளன. ஒன்97 நிறுவனத்தின் தற்போதைய யுபிஐ வாடிக்கையாள்கள் மற்றும் புதிய வாடிக்கையாளா்களுக்கான வா்த்தகக் கையக வங்கியாக யேஸ் வங்கி செயல்படும்.

பாரத ஸ்டேட் வங்கி, யெஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை பே-டிஎம் செயலியின் பணப் பரிவித்தனைக் கட்டமைப்பு வழங்குநா்களாக (பிஎஸ்பி) செயல்படவுள்ளன. ஒன்97 நிறுவனத்தின் தற்போதைய யுபிஐ வாடிக்கையாள்கள் மற்றும் புதிய வாடிக்கையாளா்களுக்கான வா்த்தகக் கையக வங்கியாக யேஸ் வங்கி செயல்படும். எனவே, ‘பேடிஎம்’ என்ற யுபிஐ முகவரியைப் பயன்படுத்தி பரிவா்த்தனை செய்யும்போது அது யெஸ் வங்கிக்கு திருப்பிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பேடிஎம் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை கூறுகையில், மார்ச் 15-க்குப் பிறகும் பேடிஎம் செயலி சேவை தொடரும்.

“முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து எங்கள் நிதிச் சேவைகள் வினியோக தளத்தை விரிவுபடுத்தியுள்ளோம்.நாடு முழுவதும் உள்ள பேடிஎம்

பயனர்களுக்கு எவ்வித தடையுமின்றி தொடர்ந்து சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் மாா்ச் 15-ஆம் தேதிக்கு பிறகும் கடைகளில் உள்ள க்யூஆா் குறியீடு பணப் பரிவா்த்தனை தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது "அன்றாட பரிவர்த்தனைகளுக்கு இந்த சேவைகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான பயனர்கள் மற்றும் வணிகர்களுக்கு தொடர்ச்சியான வசதியை உறுதி செய்வதாக" பேடிஎம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com