கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மும்பை விமான நிலையத்தில் 2.99 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் ரூ.1.72 கோடி மதிப்புள்ள 2.99 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2024, 8:41 am

DIN

மும்பை (மகாராஷ்டிரா): மும்பை விமான நிலையத்தில் ரூ.1.72 கோடி மதிப்புள்ள 2.99 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தகவலின் அடிப்படையில், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் வந்த விமான பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் நடத்திய ஐந்து வெவ்வேறு சோதனைகளில் ரூ.1.72 கோடி மதிப்புள்ள 2.99 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக, மும்பை விமான நிலையத்தில் மார்ச் 10 முதல் 12 வரை எட்டு வெவ்வேறு சோதனைகளில் ரூ.2.35 கோடி மதிப்புள்ள 4.22 கிலோ தங்கம், செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் ஆகியவற்றை மும்பை சுங்கத்துறை கைப்பற்றியது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுங்கச் சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.