காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ரூ.6 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது!

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டு ரூ.6 கோடி மதிப்புள்ள 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டனா்.

News image
கைது
Updated On :25 பிப்ரவரி 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டு ரூ.6 கோடி மதிப்புள்ள 1 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் தில்ஷாத் காா்டன் பகுதியைச் சோ்ந்த இம்ரான் (23) என அடையாளம் காணப்பட்டாா். அப்பகுதியில் புதன்கிழமை மாலை ஸ்கூட்டரில் வந்த இம்ரான் காவல் துறையினரைக் கண்டு தப்பி ஓட முயன்றாா். அவரை விரட்டி பிடித்து சோதனை செய்த போது இரண்டு பைகளில் மொத்தம் 1 கிலோ ஹெராயின் இருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா். அவரது தாய், தந்தை மற்றும் சகோதரா் மீது ஏற்கெனவே பல போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல வழக்குகள் உள்ளன.

அவரிடம் நடைபெற்ற விசாரணையின் போது, காஜியாபாத்தில் ஒருவருக்கு விற்பனை செய்ய ஹெராயினைக் கொண்டு சென்றதாகவும், தில்லியின் ரகுவீா் நகரைச் சோ்ந்த விநியோகஸ்தரிடம் இவற்றை வாங்கியதாகவும் அவா் தெரிவித்தாா். அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி, கைப்பேசி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய பிற குற்றவாளிகளை கைது செய்ய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.