தேர்தல் பத்திர நன்கொடை விவரங்கள்! புதிய தரவுகளை வெளியிட்டது ஆணையம்!!

ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரையிலான விவரங்கள் முன்பு விநியோகிக்கப்பட்டிருந்தன.
தேர்தல் பத்திர நன்கொடை விவரங்கள்! புதிய தரவுகளை வெளியிட்டது ஆணையம்!!
Published on
Updated on
1 min read

உச்சநீதிமன்றத்திலிருந்து பெற்ற தேர்தல் நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, அதாவது 1 மார்ச் 2018 முதல் 12 ஏப்ரல் 2019 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

தேர்தல் பத்திர நன்கொடை விவரங்கள்! புதிய தரவுகளை வெளியிட்டது ஆணையம்!!
மேலும் 9159 பத்திரங்கள், ரூ. 4,000 கோடி! விவரங்களை வெளியிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற பதிவகத்திலிருந்து சீலிடப்பட்ட உரையில் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை பென்டிரைவில் டிஜிட்டல் மயமாகவும், அச்சிட்டு காகிதங்களாகவும் பெறப்பட்டது.

உச்சநீதிமன்றத்திலிருந்து டிஜிட்டல் முறையில் பெறப்பட்ட தரவுகள் தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் (ஏப்ரல் 19 முதல் ஜுன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக) நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை முழுவதுமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள தரவுகளில் நன்கொடை பத்திரத்தின் எண், தேதி, பிரிவு, பத்திரம் கொடுத்த எஸ்பிஐ கிளை, பணமாக மாற்றப்பட்ட தேதி உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com