மோடி மிகச் சிறந்த நடிகர்! 4,000 கி.மீ., நடந்தது ஏன்? ராகுல்

சக்திக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். சக்தி என்றால் என்ன?
மோடி மிகச் சிறந்த நடிகர்!  4,000 கி.மீ., நடந்தது ஏன்? ராகுல்
Published on
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த நடிகர் என மும்பை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் நிறைவு விழா மும்பையில் இன்று (மார்ச் 17) நடைபெற்றது. இதில் பங்கேற்க இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள்
ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள்
மோடி மிகச் சிறந்த நடிகர்!  4,000 கி.மீ., நடந்தது ஏன்? ராகுல்
மோடியை வீழ்த்துவதிலேயே ராகுலின் வெற்றி உள்ளது: மும்பையில் மு.க. ஸ்டாலின் உரை

நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி, ஊடகங்களும், சமூக ஊடகங்களும் தற்போது நாட்டின் கைகளில் இல்லை. வேலைவாய்ப்பின்மை, கலவரம், பணவீக்கம், விவசாயிகள் பிரச்னை என அனைத்தும் மூடி மறைக்கப்படுகிறது. நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கவனத்தைப் பெற 4,000 கிலோமீட்டர் தூரம் நடந்தோம்.

பிரதமர் மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளது. இதுதான் உண்மை.

ஹிந்து மதத்தில் சக்தி என்றொரு சொல் உள்ளது. அந்த சக்திக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். சக்தி என்றால் என்ன?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் போன்று, அமலாக்கத் துறை, புலனாய்வுத் துறை, வருமான வரித் துறையில் மோடியின் ஆன்மா உள்ளது.

மகாராஷ்டிரத்தின் மூத்த தலைவர் ஒருவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, எனது தாய் சோனியாவிடம் கதறி அழுகிறார். என்னால் இந்த சக்திக்கு எதிராக போராட முடியவில்லை என கண்ணீர் விடுகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் இதுபோன்று அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com