தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தேர்தல் ஆணையத்துக்கு புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் தேர்தல் ஆணையர்களின் நியமனத்தை நிறுத்தி வைப்பது தற்போதைய சூழ்நிலையில் குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் 2023-ம் படி தேர்தல் ஆணையரை நியமிக்க தடைக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாகூர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், இந்தியத் தலைமை நீதிபதி அல்லாமல், தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் குழு சுதந்திரமாகவே இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களின் நியமனத்தை மேற்கொண்டிருப்பதாக மத்திய அரசு, விளக்கம் கொடுத்திருந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒருநாள் முன்புத்தான், தேர்வுக் குழுவின் ஆலோசனைக் கூட்டமே நடைபெற்றது என்பதை மறுத்திருந்தது.

இதுவரை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்த நிலையில், கடந்தாண்டு மத்திய அரசு திருத்தம் செய்த சட்டத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரை குழுவில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com