2ஜி அலைக்கற்றை வழக்கு: மேல்முறையீடு மனு விசாரணைக்கு ஏற்பு!

2ஜி அலைக்கற்றை வழக்கின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளதாக தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை வழக்கு: மேல்முறையீடு மனு விசாரணைக்கு ஏற்பு!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்பட 14 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குத் தொடுத்தது.

தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி அளித்த தீர்ப்பில், சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார்.

2ஜி அலைக்கற்றை வழக்கு: மேல்முறையீடு மனு விசாரணைக்கு ஏற்பு!
தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

இந்நிலையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் 2018-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீடு குறித்து விசாரணை நடந்து முடிந்த நிலையில், கனிமொழி, ஆ. ராசாவுக்கு எதிரான சிபிஐயின் மேல்முறையீட்டு வழக்கை ஏற்கலமா? வேண்டாமா? என்று குறித்து தில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், இவ்வழக்கின் மேல்முறையீட்டு மனுவை ஏற்பதாக நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு மே 20 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படிம் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com