தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

2 தொகுதிகளுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

மக்களவைத் தோ்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 3 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தமாக தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் தமாகாவுக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

ஜி.கே.வாசன்
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்!

இந்த நிலையில், ஈரோட்டில் விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூரில் வி.என். வேணுகோபாலும் போட்டியிடுகின்றனர். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சைக்கிள் சின்னத்தை ஒதுக்குமாறு தோ்தல் ஆணையத்திடம் தமாகா சாா்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்லையில் தமாகாக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com