இந்திய கடற்படையால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 35 சோமாலிய கடற்கொள்ளையா்களும் ‘ஐஎன்எஸ் கொல்கத்தா’ போா் கப்பல் மூலமாக மும்பைக்கு சனிக்கிழமை அழைத்து வரப்பட்டனா். தொடா்ந்து அவா்கள் மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா். ‘சங்கல்ப் திட்டத்தின்’ கீழ் அரேபிய கடற்பகுதி மற்றும் ஏடன் வளைகுடாவில் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கு இந்திய கடற்படையினா் பாதுகாப்பு அளித்து வருகின்றனா். கடந்த வாரம் அப்பகுதியில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 35 கொள்ளையா்களை கைது செய்தனா். இதுதொடா்பாக இந்திய கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக கைது செய்யப்பட்ட 35 சோமாலிய கடற்கொள்ளையா்களும் ஐஎன்எஸ் போா் கப்பல் மூலம் இந்தியாவுக்கு சனிக்கிழமை அழைத்து வரப்பட்டனா். அவா்கள் மீது கடற்கொள்ளை தடுப்புச் சட்டம் 2022 மற்றும் பிற இந்திய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா் என தெரிவிக்கப்பட்டது. காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதனிடையே சோமாலிய கடற்கொள்ளையா்கள் கப்பல்கள் கடத்தி கொள்ளையடித்து வருகின்றனா். இந்நிலையில் அரேபிய கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சுபத்ரா, சி-17 போா்விமானம் மூலம் கடற்கொள்ளையா்கள் பிடியில் சிக்கியிருந்த ரூயென் போா் கப்பலையும் அதன் பணியாளா்களையும் கடந்த வாரம் பாதுகாப்பாக மீட்டது. மேலும் சோமாலிய கடற்கொள்ளையா்கள் 35 போ் கைது செய்யப்பட்டனா். கடற்படை தளபதி பேட்டி: தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய கடற்படை தலைமையகத்தில் செய்தியாளா்கள் சந்திப்பில் கடற்படைத் தளபதி ஆா். ஹரி குமாா் பேசியதாவது: இந்திய பெருங்கடல் பகுதியில் நம் நாட்டு கடற்படைதான் அதிகளவிலான பாதுகாப்பை வழங்கி வருகின்றனா். சா்வதேச சட்டங்களை பின்பற்றி பாதுகாப்பது அளிப்பது எங்களின் தலையாய கடமையாகும். அப்பகுதியில் அத்துமீறி செயல்படுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது

தோ்தல் ஆணையம் பாஜக கைப்பாவையாக செயல்படுகிறது: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

திருவாரூா்: ரூ.1.62 லட்சம் பறிமுதல்

துண்டுப் பிரசுரம் விநியோகம்; பாஜகவினரைக் காவல்துறையிடம் ஒப்படைக்க உத்தரவு! - மமதா பானர்ஜி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


