ஹோலி பண்டிகை: அலிகாரில் 2 மசூதிகளை தார்ப்பாய்கள் மூலம் மூடிய காவல்துறையினர்

ஹோலி பண்டிகை: அலிகாரில் 2 மசூதிகளை தார்ப்பாய்கள் மூலம் மூடிய காவல்துறையினர்

வண்ணங்களைத் தூவுவதைத் தவிர்ப்பதற்காக அலிகாரில் இரண்டு மசூதிகளை தார்ப்பாய்கள் மூலம் காவல்துறையினர் மூடியுள்ளனர்.

ஹோலி என்றால் வண்ணம், ஹோலி என்றால் உற்சாகம். வட மாநிலங்களில் மதுரா, வாராணசி போன்ற இடங்களில் ஹோலி கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. நாடு முழுவதும் வெகு விமரிசையாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலிகா எனும் அரக்கி தீயில் அழிந்த புராணத்தை நினைவுகூரும் வகையிலும், வசந்த காலத்தை வரவேற்கும் வகையிலும் இந்தப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையின் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது மக்கள் வண்ணங்களைத் தூவுவதைத் தவிர்ப்பதற்காக அலிகார் நகரத்தில் உள்ள குறைந்தது இரண்டு மசூதிகள் தார்ப்பாய்கள் மூலம் மூடப்பட்டுள்ளதாக காவல்துறைனிர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இவ்வாறு மூடப்பட்ட மசூதிகளில் ஒன்றுசப்ஜி மண்டி பகுதியில் உள்ள ஹல்வாய்யன் மசூதியும், மற்றொன்று தில்லி கேட் பகுதியில் அமைந்துள்ளதாகவும் அதிகாரி அபய் பாண்டே கூறியுள்ளார். மதத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும், பழைய நகரப் பகுதிகளில் போலீஸ் தடுப்பு போடப்பட்டுள்ளதாகவும் பாண்டே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com