
கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக மேலவை உறுப்பினரும் மூத்த தலைவருமான தேஜஸ்வினி கெளடா, அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இன்று (மார்ச் 30) இணைந்தார்.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு பாஜக மதிப்பு கொடுக்கவில்லை என்பதால், அக்கட்சியிலிருந்து விலகுவதாக தேஜஸ்வினி கெளடா தெரிவித்தார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமையகத்தில், பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மாநில தலைவர் பவன் கேரா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தேஜஸ்வினி கெளடா இணைந்தார்.
2004 -2009 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக தேஜஸ்வினி இருந்தார். பின்னர் 2014ம் ஆண்டு பாஜகவின் இணைந்தார். தற்போது அரசியலில் தன்னை வளர்த்தெடுத்த காங்கிரஸ் கட்சிக்கே தேஜஸ்வினி திரும்பியுள்ளார்.
இது குறித்து பேசிய தேஜஸ்வினி கெளடா, ''அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு பாஜக மதிப்பு கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி வெறும் வார்த்தைகளோடு மட்டுமல்லாமல், செயல் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. மிகவும் உண்மையுடன் பணியாற்றவுள்ளேன்'' எனக் குறிப்பிட்டார்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ''கர்நாடக அரசியலில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர் காங்கிரஸில் இணைந்ததில் மகிழ்ச்சி. தேஜஸ்வினி கெளடாவை வரவேற்கிறோம். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக அவர் சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என்று நம்புகிறோம். காங்கிரஸ் கட்சியில் எம்.பி.யாக இருந்தவர் தேஜஸ்வினி. அவர் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி'' எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.