இந்தியா கூட்டணியை உடைக்கும் எண்ணம் தோல்வி: மு.க. ஸ்டாலின்

தில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் முதல்வரின் உரையை திருச்சி சிவா வாசித்தார்.
இந்தியா கூட்டணியை உடைக்கும் எண்ணம் தோல்வி: மு.க. ஸ்டாலின்

இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணம் தோல்வியடைந்துவிட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறையினர் கைது செய்ததைக் கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் முதல்வரின் உரையை திருச்சி சிவா வாசித்தார்.

அதில், "சர்வாதிகாரத்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.பாசிச பாஜக ஆட்சியை அகற்றுவோம்.

பாஜகவின் பாசிச ஆட்சியை அகற்றிவிட்டு கூட்டாட்சி இந்தியாவை கட்டமைப்போம்

கொடுங்கோல் ஆட்சி மூலம் யாரும் வென்றது கிடையாது என்பதையே வரலாறு நமக்கு காண்பிக்கிறது.

அரவிந்த் கேஜரிவால் கைது மூலம் இண்டியா கூட்டணியை உடைக்க நினைத்த மோடியின் எண்ணம் தோல்வியடைந்துவிட்டது.

நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். பாஜகவின் பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மக்கள் தயாராக உள்ளனர்" என முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com