தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அரசியலமைப்பு அழிந்து விடும்: ராகுல் காந்தி


தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், அரசியலமைப்பு அழிந்து விடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்திய கூட்டணிக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் "மேட்ச் பிக்சிங்" செய்ய பிரதமர் மோடி முயற்சிக்கிறார். நீங்கள் முழு பலத்துடன் வாக்களிக்கவில்லை என்றால், அவர்களின் மேட்ச் பிக்சிங் வெற்றி பெறும். அப்படி பாஜக வெற்றி பெற்றால் அரசியலமைப்பு அழிந்து விடும். நமக்கு முன் மக்களவைத் தேர்தல் உள்ளது.
நடுவர்கள் பிரதமர் மோடியால் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். எங்கள் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் போட்டிக்கு முன்பே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மேட்ச் பிக்சிங்கை நரேந்திர மோடியும் மூன்று நான்கு பில்லியனர்களும் செய்கிறார்கள். காங்கிரஸ் மிகப்பெரிய எதிர்க்கட்சி. தேர்தல் சமயத்தில் எங்களது வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டன.
இவிஎம், ஊடகங்களுக்கு நெருக்கடி தராவிட்டால் பாஜகவால் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, தலைநகர் தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் சார்பில் மாபெரும் போராட்டம் இன்று(மார்ச். 31) நடைபெறுகிறது.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...