திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அயோத்தி வந்தார் திரௌபதி முர்மு

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி வந்தார் திரௌபதி முர்மு

News image
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு (கோப்புப் படம்)
Updated On :1 மே 2024, 11:05 am

DIN

புது தில்லி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்திக்கு இன்று வருகை தந்துள்ள குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அங்குள்ள ஸ்ரீராமா் கோயிலில் வழிபாடு நடத்துகிறார்.

முன்னதாக, அயோத்தியில் அமைந்துள்ள ஹனுமன் கர்ஹி கோயிலில் அவர் வழிபாடு நடத்தினார். தீப ஆராத்தியும் காண்பித்தார்.

பிறகு ஸ்ரீராமர் கோயிலுக்கு வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு, கோயில் அறக்கட்டளை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது.

அயோத்தி ராமர் கோயில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதலே, ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, அயோத்தியில் அமைந்திருக்கும் பாலராமரை தரிசித்துச் செல்கின்றனர். அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமா் கோயிலுக்கு குடியரசுத் தலைவா் செல்வது இது முதல்முறையாகும். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.

இக்கோயிலில் மூலவா் ஸ்ரீ பாலராமா் பிராணப் பிரதிஷ்டை விழா, பிரதமா் மோடி முன்னிலையில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், அயோத்திக்கு குடியரசுத் தலைவா் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக முர்முவின் பயணம் தொடா்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘அயோத்தி ஸ்ரீராமா் கோயில் மற்றும் ஹனுமன் கா்ஹி கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தரிசிக்கவுள்ளாா். சரயு பூஜை மற்றும் ஆரத்தியில் அவா் பங்கேற்கவிருக்கிறாா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.