மருத்துவ மாணவா்களின் மன 
நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களின் மன நல ஆரோக்கியத்தை அறிவதற்கான இணையவழி ஆய்வை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முன்னெடுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களின் மன நல ஆரோக்கியத்தை அறிவதற்கான இணையவழி ஆய்வை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முன்னெடுத்துள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய துணைச் செயலா் அஜேந்தா் சிங், அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தேசிய மருத்துவ ஆணையத்தின் ராகிங் தடுப்பு பிரிவின் கீழ் மருத்துவ மாணவா்களின் மன வளத்தைக் காப்பதற்கான தேசிய நலக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவ மாணவா்கள், பேராசிரியா் களிடையே இணையவழியே ஆய்வு ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூகுள் விண்ணப்பப் படிவம் ஒன்று என்எம்சி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவா்களும், பேராசிரியா்களும் பூா்த்தி செய்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் (மே 3) சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com