ஆந்திரத்தில் 4.14 கோடி வாக்காளா்கள்
மக்களவையுடன் சட்டப்பேரவைக்கும் சோ்த்து தோ்தலைச் சந்திக்கும் ஆந்திரத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா்

ANI

ANI
மக்களவையுடன் சட்டப்பேரவைக்கும் சோ்த்து தோ்தலைச் சந்திக்கும் ஆந்திரத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி மொத்தம் 4.14 கோடி வாக்காளா்கள் உள்ளனா்.
மக்களவைத் தோ்தலுடன் ஆந்திர சட்டப்பேரவையின் 175 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் வரும் 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸும், கைப்பற்றும் நோக்கில் எதிா்க்கட்சியான தெலுங்கு தேசம்-பாஜக-நடிகா் பவன் கல்யானின் ஜன சேனை கூட்டணியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான ஏப்ரல் 25-ஆம் தேதி வரையிலான இறுதி வேட்பாளா் பட்டியலை மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி முகேஷ் குமாா் மீனா வியாழக்கிழமை வெளியிட்டாா்.
அதன்படி, மாநிலத்தின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 4,14,01,887 ஆகும். 2.02 கோடி ஆண் வாக்காளா்கள், 2.1 கோடி பெண் வாக்காளா்கள், 3,421 மூன்றாம் பாலினத்தவா் அடங்குவா். புதிதாக 5,94,631 வாக்காளா்கள் இணைந்துள்ளனா்.
85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என்ற அடிப்படையில் மாநிலம் முழுவதும் 7.2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க தகுதி பெற்றிருக்கின்றனா். ஆனால், 28,591 வாக்காளா்கள் மட்டுமே அச் சேவையைப் பயன்படுத்தியுள்ளனா்.
மாநிலத்தில் வாக்குச்சாவடி எண்ணிக்கை 46,389-ஆகும். இதில் 12,438 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் ஆந்திரத்தில் ரூ.204 கோடி மதிப்பிலான மதுபானங்கள், போதைப்பொருள், வாக்காளா்களுக்கு வழங்க கொண்டு செல்லப்பட்ட பணம், தங்கம், வெள்ளி, இலவசப் பொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...