பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

ஜெர்மனியில் இருந்து நாட்டின் எந்த விமான நிலையத்துக்கு வந்தாலும் அவர் கைது செய்யப்படலாம்.
பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

கர்நாடகத்தில், பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரஜ்வல் வீட்டுக்குச் சென்று காவல்துறையினர் சம்மன் அனுப்பிய நிலையில், பெங்களூருவில் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று எக்ஸ் தளம் மூலம் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இதற்கிடையே, ஜெர்மனி சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணா அடுத்த வாரம் நாடு திரும்புவதற்காக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நாடு திரும்பும் பிரஜ்வல் எந்த விமான நிலையத்துக்கு வந்தாலும் கைது செய்வதற்கான லுக் அவுட் நோட்டீஸை கர்நாடக காவல்துறையினர் குடியேற்ற பிரிவுக்கு அனுப்பியுள்ளனர்.

பிரஜ்வல் ரேவண்ணா
பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாலியல் குற்றச்சாட்டை அடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா மஜதவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா். பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படையை கா்நாடக அரசு அமைத்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்கு 24 மணி நேரத்திற்குள் ஆஜராகுமாறு சிறப்புப் புலனாய்வுப் படை பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு புதன்கிழமை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டதால் அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டுமென கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியில் ஹாசன் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com