5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

திரெளபதி முர்மு
திரெளபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக ஹிமாசல பிரதேசத்திற்கு நாளை செல்கிறார்.

தமது பயணத்தின்போது, சிம்லாவில் உள்ள மஷோப்ராவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் தங்குவார். மே 6-ம் தேதி தர்மசாலாவில் ஹிமா​சல பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

மே 7 அன்று, சிம்லாவில் உள்ள கெயிட்டி பாரம்பரிய கலாச்சார வளாகத்தில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.

பின்னர், சிம்லாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஹிமா​சல பிரதேச ஆளுநர் அளிக்கும் இரவு விருந்தில் அவர் பங்கேற்கிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 4 முதல் 8 வரை ஹிமா​ பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com