ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மூன்று மாநிலங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார்.
LS
LS

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார்.

இன்று காலை ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கிய பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவருக்கு பாஜக சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுக்கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்துகிறார்.

அதைத்தொடர்ந்து பிகா்ரில் இன்று மாலை தர்பங்காவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து உ.பி.யின் கான்பூரில் வாகனப் பேரணி நடைபெறுகிறது. அவருடன் முதல்வரும், பாஜக தலைவருமான யோகி ஆதித்யநாத் கலந்துகொள்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மற்றும் டாமன் மற்றும் டையூவில் பொதுக்கூட்டங்களில் இன்று உரையாற்றுகிறார். அவர் குஜராத்தில் சோட்டா உதய்பூரில் உள்ள போடேலியிலும், மற்றொன்று வன்ஸ்டாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிற்பகல் 1:15 மணிக்கும், பின்னர் டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்திலிருந்து உள்துறை அமைச்சர் டாமன் மாவட்டத்தின் துனேதாவில் உள்ள சுவாமி விவேகானந்தர் விளையாட்டு வளாகத்தில் மாலை மணிக்கு பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இன்று நாடு முழுவதும் முக்கிய அரசியல் தலைவர்கள் பல இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com