பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்
பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

சுசாரிதா மொகந்தி, ஒடிசா மாநிலம் புரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். இவர், பிரசாரம் செய்ய போதிய பணமில்லை என்று கூறி, தனக்கு காங்கிரஸ் அளித்த வேட்பாளர் வாய்ப்பை திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளார்.

மக்களிடம் நன்கொடை பெற்றும், செலவுகளை மிகவும் சிக்கனமாக செய்தும் கூட பிரசாரம் செய்ய போதிய பணமில்லாமல் கஷ்டப்படுவதாகவும், தன்னால் உரிய முறையில் பிரசாரம் செய்ய முடியாது என்பதால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் சுசாரிதா மொகந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தள வேட்பாளரிடம் தோல்வியடைந்த மொகந்தி 2,89,800 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் கூறியிருப்பதாவது, கட்சியிடமிருந்து எனக்கு நிதி தரப்படவில்லை. பாஜக மற்றும் பிஜு ஜனதா தள வேட்பாளர்கள் பணத்தின் மீதே அமர்ந்திருக்கிறார்கள். எனவே, இது மிகவும் கஷ்டமாக உள்ளது. இப்படி போட்டியிட நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு, காங்கிரஸ் கட்சியின் நிதியாதாரங்களை எல்லாம் முடக்கிவிட்டது. பிறகு கட்சி என்ன செய்யும் என்று கேள்வி எழுப்பும் மொகந்தி, காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபாலுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், கட்சி நிதியளிக்காததால், பிரசாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தரப்பிலிருந்து சிலர், தன்னையே செலவு செய்யச் சொல்வதாகவும் தெரிவித்துள்ளார். கட்சி நிதி கொடுக்காவிட்டால் என்னால் பிரசாரம் செய்ய முடியாது. எனவே, எனக்கு வழங்கப்பட்ட வேட்பாளர் வாய்ப்பை நான் கட்சியிடமே திருப்பிக்கொடுக்கப் போகிறேன் என்றார்.

ஒடிசாவில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய கட்டங்களில் நடைபெறவிருக்கிறது.

முன்னதாக, அவர் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம், பிரசாரத்துக்கு நிதியுதவி செய்யுமாறு நன்கொடை கேட்டு பதிவிட்டிருந்தார். பெரிய தொகையோ, சிறிய தொகையோ அளித்து உதவுமாறும் அவர் க்யூஆர் கோடு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com