சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை செய்ததாக ரேவண்ணாவுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பனிர் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருக்கும் 44 வயதான முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர், தன்னையும் கணவரையும் சுட்டுக்கொன்றுவிடுவேன் என மிரட்டி பாலியல் வன்கொடுமை வெய்ததாக புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில்தான், பிரஜ்வல் மீது முதல் முறையாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 376ன் கீழ் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா
மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

முன்னதாக, பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் பேரனும் ஹாசன் தொகுதி மதச்சாா்பற்ற ஜனதா தள (மஜத) எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக தேடப்படும் நபராக (லுக் அவுட்) நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகம், ஹாசன் தொகுதி எம்.பி.யாகவுள்ள பிரஜ்வல் ரேவண்ணா 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 2,800-க்கும் மேற்பட்ட காணொலியாக பதிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரில், ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடா்பாக சிறப்பு விசாரணைப் பிரிவு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

பிரஜ்வல் ரேவண்ணா
தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

தேவெ கௌடா குடும்பத்தாருக்கு இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தியதையடுத்து, மஜக கட்சியிலிருந்து தந்தையும் மகனும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் எஸ்.ஐ.டி. சம்மன் அனுப்பியது.

ஆனால், ஜொ்மனியில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா, விசாரணைக்கு ஆஜராக 7 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தனது வழக்குரைஞா் மூலம் எஸ்.ஐ.டி.யிடம் கேட்டுக்கொண்டாா்.

இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத பிரஜ்வல் ரேவண்ணா மீது ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஷ்வரா தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com