மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

புது தில்லி: மக்களவைத் தேர்தலில் அடுத்தக்கட்ட தேர்தலின்போது மகாராஷ்டிரத்தின் மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெங்காய ஏற்றுமதி தடை நீக்கப்பட்டிருப்பதாகவும், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன் வெங்காயத்துக்கு 550 டாலர் என நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்
தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் பொருள்களின் பட்டியலில் வெங்காயம் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று சில நாடுகளுக்கு மட்டும் இந்தியாவிலிருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

மகாராஷ்டிரம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான வெங்காய வணிகர்கள் மற்றும் வியாபாரிகள், வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பிவந்தனர். அவ்வாறு தடை நீக்கப்பட்டால், வெங்காய விவசாயிகளுக்கு விளைவிக்கப்படும் வெங்காயங்களுக்கு ஒருநல்ல விலை கிடைக்கும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டித்தே வந்துள்ளது.

இந்த நிலையில்தான், வெங்காய உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் அடுத்தகட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், அம்மாநில வெங்காய விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், இதுநாள் வரை விதிக்கப்பட்டிருந்த வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

வெங்காயத்தின் விலை அவ்வப்போது பன்மடங்காக அதிகரிப்பதால், சாதாரண மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை உருவாகும்.

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்
ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

நுகா்வோரின் சிரமத்தைப் போக்கும் விதமாக, விலை உயா்வைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாகவே வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி தடை விதித்தது.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரை இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதை மேலும் நீட்டித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) அண்மையில் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘வெங்காய ஏற்றுமதிக்கு மாா்ச் 31 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தடை விதிக்கப்பட்டபோதும், மத்திய அரசின் அனுமதியின் பேரில், நட்பு நாடுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், இன்று வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கி அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com