பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம்.
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம்.

கர்நாடக காங்கிரஸ் அரசு, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ம.ஜ.த. கட்சித் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதனை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளருமான ரந்தீப் சிங் சுர்ஜ்வாலா இன்று மாநில முதல்வர் சித்தராமையாவுடனான பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையா

கர்நாடகத்தில் பல பெண்களைப் பாலியல் ரீதியாகச் சீரழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும் மக்களவை உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா, நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். அவரைப் பிடிக்க ப்ளு கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் உள்ள அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று ரேவண்ணா வீட்டின் பணிப்பெண் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் பிரஜ்வலின் தந்தையும், தேவகவுடாவின் மகனுமான எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம்.
எச்.டி. ரேவண்ணா கைது!

இந்த விவகாரம் குறித்து பேசிய சுர்ஜ்வாலா, “இது கடந்த 75 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான சம்பவமாகும். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் சித்தராமையா அனைவருக்கும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் அவர்களின் கூட்டணி வேட்பாளரான பாலியல் குற்றவாளி பிரஜ்வால் ரேவண்ணாவைப் பாதுகாக்க நினைக்கின்றனர். இல்லையெனில் பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பது தெரிந்தே அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பார்களா? மேலும், ப்ளு கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பின்னும் இண்டர்போல் மூலம் அவரை கைது செய்யாமல் இருப்பது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com