ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!
ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!
-

சென்னை: தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது தெற்கு ரயில்வே. விரைவு ரயில்கள் புறப்பட்ட சில மணி நேரங்களில் ரயில்களில் தண்ணீரில்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

சென்னை மற்றும் கோவையிலிருந்து இயக்கப்பட்ட சில இன்டர்சிட்டி மற்றும் நீண்ட தொலைவு விரைவு ரயில்கள் புறப்பட்ட சில மணி நேரங்களில் தண்ணீர் இல்லாமல் போனதால், பயணிகள் கடும் துயரத்தை அடைந்தனர்.

சென்னை - சேலம் இடையே இயக்கப்படும் ரயில்களில் போதிய தண்ணீர் இல்லாமல் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் இன்னலுக்கு ஆளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததாலும், வெளியிலிருந்து கிடைக்கும் தண்ணீர் அளவு குறைந்த நிலையிலும் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலிருந்து புறப்படும் ரயில்களுக்கு போதுமான தண்ணீரை வழங்க முடியாமல் தெற்கு ரயில்வே திணறித்தான் வருகிறது.

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!
பொறியியல் படிப்புகள் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், தற்போது தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், வார நாள்களில் (திங்கள் - வியாழன்) பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால், ரயில்களில் முழுமையான அளவில், 50 சதவீதம் மட்டுமே தண்ணீர் டேங்குகள் நிரப்பப்படுகின்றன. வார இறுதி நாள்களில் மட்டும் 75 சதவீத டேங்குகள் நிரப்பப்படுகின்றன.

ஒருபக்கம் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், கோடை விடுமுறை காலம் என்பதால் வார நாள்களிலும் ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக கிட்டத்தட்ட 100 விழுக்காடு நிரம்பியிருந்ததால், தண்ணீர் பற்றாக்குறை நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வெறும் 25 சதவீத தண்ணீர் மட்டுமே நிரப்பப்படுகிறது என்கிறார்கள்.

தண்ணீர் பிரச்னை.. தீவிர கண்காணிப்பில்..

ஒரு சாதாரண ரயிலின் ஒரு பயணத்துக்கான தண்ணீர் தேவை என்பது 40 ஆயிரம் லிட்டர். சில நாள்களுக்கு முன்பு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் சென்னை - சேலம் இடையே சில நாள்களுக்கு முன்பு இயக்கப்பட்ட ரயிலில் தண்ணீர் தீர்ந்துபோனதால் அடுத்த ரயில்நிலையத்தில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. வணிக மற்றும் மெக்கானில் துறை அதிகாரிகள் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கண்காணித்து வருகிறார்கள் என்று தெற்கு ரயில்வே தலைமையக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் நிரப்பாமல் ரயில் இயக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

நீண்ட தொலைவு செல்லும் ரயில்களில், தண்ணீர் குறையும் போது அடுத்த ரயில் நிலையங்களில் தண்ணீர் நிரப்பவும், ரயில் பெட்டிகளின் சுகாதாரத்தை சீராக வைக்கவும், தினந்தோறும் சுத்தப்படுத்துதல், குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவும் ரயில்வே முழுமூச்சில் செயல்பட்டு வருகிறது.

சென்னை - கோவை இடையேயான ரயில்களில் நீர்நிரப்ப, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு ஆகிய ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதுபோல, செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ரயில் நிலையங்களிலும் தண்ணீர் டேங்குகள் நிரப்பப்பட்டு வருகின்றன.

பொதுவாக முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில்தான் அதிக ரயில் பயணிகள் பயணிப்பர். தண்ணீர் பற்றாக்குறையின்போது இங்கு உட்கார முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. சிலர், வேறு பெட்டிகளுக்கு மாறும் சூழ்நிலை உருவாகிறது. இது தொடர்பாக பல்வேறுவழிகளிலும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை என்கிறார்கள் வழக்கமாக ரயில்களில் பயணிக்கும் பயணிகள்.

சென்னை மெட்ரோ வாரியம் வழங்கும் தண்ணீர் திருவொற்றியூர் தண்ணீர் தொட்டிகளில் நிரப்பப்பட்டு குழாய்கள் மூலம் ரயில்நிலையங்களை அடைகிறது. பேசின்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடுலம் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும், கோடைக்காலத்தில் ரயில்களுக்கு தண்ணீர் நிரப்புவது என்பது இன்னமும் சவாலாகவே உள்ளது. தண்ணீரை மிச்சம் செய்வதற்காக ரயில் பெட்களின் மேல் பகுதிகளை சுத்தப்படுத்தும் பணிகள் சில வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்கிறார்கள்.

சுமார் 33 ரயில்களின் முதன்மை மற்றும் 45 ரயில்களை அடிப்படையில் சுத்தம் செய்யும் பொறுப்பு பேசின்பிரிட்ஜ் பணிமனைக்கே உள்ளது.

ஒவ்வொரு நாளும் இந்தப் பணிகளுக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதுபோல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு 65 ஆயிரம் பயணிகள் வந்து செல்வார்கள். இவர்களுக்கு 10 லட்சம் தண்ணீர் தேவைப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக தனியார் குடிநீர் லாரிகளிலிருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com