85 விமானங்கள் ரத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் பாதிப்பு: 85 விமானங்கள் ரத்து
கோப்புப் படம்
கோப்புப் படம்

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நிறுவனம், வியாழக்கிழமை 85 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விமானிகள் உள்பட பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் அட்டவணையிடப்பட்ட விமானங்களில் 20 சதவிகித விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியாவின் உதவியுடன் 20 பயண வழிகளில் இயக்கப்படும் விமானங்கள் உள்பட 283 விமானங்கள் வியாழக்கிழமை இயக்கப்பட்டுவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று 283 விமானங்கள் இயக்குகிறோம். எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்துகிறோம் மற்றும் ஏர் இந்தியாவின் உதவியுடன் 20 பயண பாதைகளில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. 85 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் பயணிகள் தங்கள் விமானம் குறித்த விவரத்தை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

ஒரே நாளில் 300 விமான ஊழியர்கள் உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்ததால் செவ்வாய்க்கிழமை மாலை முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது நாளான இன்றும் விமான சேவையில் பிரச்னை தொடர்கிறது.

இந்த நிலையில்ம் விடுப்பு எடுத்த விமான ஊழியர்களில் 30 பேரை அதிரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பணி நீக்கம் செய்தது. ஊழியர்கள் வியாழக்கிழமை மாலை 4 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும் என விமான நிர்வாகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com