தாமதமாகும் வாக்குப்பதிவு விவரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மனு

தாமதமாக வாக்குப்பதிவு விவரம் வெளியீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தாமதமாகும் வாக்குப்பதிவு விவரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மனு

தேர்தலில், வாக்குப்பதிவு முடிந்து 48 மணி நேரத்துக்குள் வாக்குப்பதிவு தரவுகள் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கழகம்.

நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், இதுவரை நடந்த வாக்குப்பதிவு விவரங்களை, தேர்தல் முடிந்து ஒருசில நாள்களுக்குப் பிறகே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 11 நாள்களுக்குப் பிறகும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த நிலையில் 4 நாள்களுக்குப் பிறகே தேர்தலில் பதிவான வாக்கு விவரங்கள் வெளியிடப்பட்டன.

தாமதமாகும் வாக்குப்பதிவு விவரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மனு
உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

அதிலும், முதற்கட்டமாக வெளியான வாக்குப்பதிவு தரவுகளுக்கும், இறுதியாக வெளியான தரவுகளுக்கும் இடையே 5 சதவீத வாக்கு வித்தியாசம் இருந்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் பதிவானதாகக் கூறப்பட்ட வாக்குகளை விட 5-6 சதவீதம் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கத்தைவிட மாறாக பல நாள்கள் கழித்து தரவுகள் வெளியிடப்படுவதும், அதில் இந்த அளவுக்கு வேறுபாடு இருப்பதும் மக்களவை அச்சமடையச் செய்கின்றன. இந்த தரவுகளில் ஏற்படும் வேறுபாடுகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்புகின்றன என்று வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தேவையற்ற அச்சங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. வாக்காளர்களின் நம்பிக்கையை பெறவேண்டுமானால், வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் உரிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வாக்குப்பதிவு முடிந்து 48 மணி நேரத்துக்குள் இறுதி புள்ளிவிவரம் வெளியிடப்பட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com