உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

அகிலேஷ் யாதவை ஆதரித்து கன்னோஜ் தொகுதியில் ராகுல் காந்தி பிரசாரம்
கன்னோஜ் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்...
கன்னோஜ் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்...பி.டி.ஐ


கன்னோஜ்: உத்தரப் பிரதேசத்தை வந்தடைந்திருக்கிறது இந்தியா கூட்டணி புயல்; நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கன்னோஜ் தொகுதியில் அவருக்காக வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார் ராகுல் காந்தி.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக ஆகப் போவதில்லை என்று குறிப்பிட்டார் அவர்.

கன்னோஜ் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்...
24 மணி நேரத்தில் 49 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

இந்தியா கூட்டணியில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸும் சமாஜவாதி கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன.

இந்தியா கூட்டணிப் புயல் உத்தரப் பிரதேசத்துக்கும் வந்துவிட்டது. மாநிலத்தில் மிக மோசமான தோல்வியை பாரதிய ஜனதா கட்சி சந்திக்கப் போகிறது என்றும் குறிப்பிட்டார் ராகுல் காந்தி.

பிரசாரக் கூட்டங்களில் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் ஆகியோரும் பேசினர்.

கன்னோஜ் தொகுதியில் மே 13 வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com