அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம்: கேஜரிவால் பேச்சு

அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம் செய்வதாக கேஜரிவால் காரசாரமாகப் பேசியிருக்கிறார்.
அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம்: கேஜரிவால் பேச்சு

அமித் ஷாவை அடுத்த பிரதமராக்கவே மோடி பிரசாரம் செய்து வருகிறார், ஜூன் 4ஆம் தேதியுடன் பிரதமர் நரேந்திர மோடி ஓய்வுபெற்று விடுவார் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

ஊழலை ஒழிப்பது எப்படி என்று பிரதமர் மோடி கற்றுக்கொள்ள விரும்பினால், அதனை அரவிந்த் கேஜரிவாலிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும், ஏனென்றால், நாங்கள்தான் ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பினோம். பாஜக ஆளும் மாநிலங்களில் நீங்கள் செய்த ஊழலை யாராலும் மறைக்க முடியாது.

அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம்: கேஜரிவால் பேச்சு
அகிலேஷ் யாதவால் இந்தியா - பாக். போட்டியாக மாறிய கன்னௌஜ்!

கடவுள் ஹனுமன் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆசிர்வாதத்தை அனுப்பியிருக்கிறது, அதனால்தான் இந்த அதிசயம் நடந்து, இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன்.

ஆம் ஆத்மி கட்சியை அழித்தொழிக்க அனைத்து முயற்சிகளையும் பிரதமர் மோடி செய்துவிட்டார், ஒரு வாய்ப்பைக் கூட விட்டுவைக்கவில்லை, கட்சியின் முக்கியத்தலைவர்கள் நான்கு பேரையும் அவர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார் என்று கேஜரிவால் பேசியுள்ளார்.

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக 21 நாள்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில், தில்லி திகாா் சிறையில் இருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்டாா்.

தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 25-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.

ஆம் ஆத்மியின் முன்னணி தலைவரான கேஜரிவால் இல்லாமல் அக்கட்சியின் பிரசாரம் களையிழந்து காணப்பட்டது. இந்தச் சூழலில், 50 நாள்களுக்கு பின் சிறையில் இருந்து அவா் வெளியே வந்திருப்பது ஆம் ஆத்மியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைதாகி 50 நாள்களுக்குப் பின்னா் இடைக்கால ஜாமீன் கிடைக்கப் பெற்ற நிலையில், திகாா் சிறையில் இருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com