அகிலேஷ் யாதவால் இந்தியா - பாக். போட்டியாக மாறிய கன்னௌஜ்!

அகிலேஷ் யாதவால் இந்தியா - பாக். போட்டியாக மாறிய கன்னௌஜ் தொகுதி.
அகிலேஷ் யாதவால் இந்தியா - பாக். போட்டியாக மாறிய கன்னௌஜ்!

லக்னௌ: சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக இருந்த கன்னௌஜ் மக்களவைத் தொகுதியின் தேர்தல் களம், திடீரென கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேரடியாக போட்டியிடுவதால் ஆட்டமே மாறியது.

உறவினர் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டு வந்த கன்னௌஜ் தொகுதியில் அகிலேஷ் களமிறங்கியிருக்கிறார்.

முதலில், கன்னௌஜ் தொகுதியில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதும், குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்றெல்லாம் பாஜக முழங்கியது. ஆனால், திடீரென இந்தத் தொகுதியில் அகிலேஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதால், பாஜக எம்.பி. சுப்ரத் பதக்குக்கு போட்டி தீவிரமடைந்தது. இவர், கடந்த 2019ஆம் ஆண்டு அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவை தோற்கடித்து வெற்றி பெற்றவர்.

அகிலேஷ் யாதவால் இந்தியா - பாக். போட்டியாக மாறிய கன்னௌஜ்!
ஒட்டுமொத்த ஆட்டத்தை மாற்றுமா கேஜரிவால் விடுதலை?

இது பற்றி சுப்ரத்தே இவ்வாறு கூறியிருக்கிறார் என்றால் பார்துக்கொள்ளுங்களேன்,.. அதாவது, தேஜ் பிரதாப் எனது போட்டியாளர் என்றால் அது இந்தியா - நேபாளம் அணிகள் மோதும் போட்டி போல, ஆனால் எப்போது அகிலேஷ் மோதுகிறார் என்று தெரிந்ததோ அது இந்தியா - பாகிஸ்தான் போட்டிபோல அதிக பரபரப்பை ஏற்படுத்திவிடும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நறுமணத் தொழிலின் தலைநகராக விளங்குகிறது கன்னௌஜ். சுப்ரத், அப்பகுதியின் மிகப் பாரம்பரியமான நறுமணத் தொழிலைச் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். இங்கு மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மிகப்பெரிய கலந்தாலோசனைகளுக்குப் பிறகே அகிலேஷ் இந்தத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவது என்னவென்றால், மனைவி டிம்பிள் யாதவ் தோல்விக்கு பழிவாங்கவும், தனது தந்தை முலாயம் சிங் யாதவின் அரசியல் வரலாற்றை மீட்டெடுக்கவும் அகிலேஷ் இந்தத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

அகிலேஷ் யாதவால் இந்தியா - பாக். போட்டியாக மாறிய கன்னௌஜ்!
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியானது அறிவிப்பு

இந்தத் தொகுதி 1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் முதல் எம்பி ராம் மனோகர் லோஹியா. லோஹியாவின் சீடர் என்னை தன்னைத்தானே கூறிக்கொள்ளும் முலாயம், மெல்ல இந்த தொகுதியை தனது கோட்டையாக்கிக்கொண்டார். கடந்த 16 தேர்தல்களில் சமாஜ்வாதி இங்கு 7 முறை வென்றுள்ளது. காங்கிரஸ், பாஜக தலா இரு முறை வெற்றி பெற்றுள்ன.

1999ஆம் ஆண்டு முலாயம் இங்கு போட்டியிட்டார். பிறகு தனது மகனுக்காக இந்தத் தொகுதியை விட்டுக்கொடுத்தார். பிறகு 2019ஆம் ஆண்டு டிம்பிள் தோல்வியால் இந்தக் கோட்டை முலாயம் குடும்பத்தின் கையிலிருந்து அகன்றது. ஆனால், இந்த வெற்றிக்கு முன்பு, சுப்ரத், கடந்த இரண்டு மக்களவைத்தேர்தலிலும் கன்னௌஜ் தொகுதியில் தோல்வியைத் தழுவியிருந்தார். இந்த முறை அகிலேஷை எதிர்கொள்கிறார். சுப்ரத்துக்கு யோகி -மோடி பலம் கைகொடுக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

மறுபுறம், அகிலேஷ் யாதவுக்கு இந்த தேர்தல் சற்று சவாலானதாக இருக்கும் என்றும், கன்னௌஜ் தொகுதி மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு அகிலேஷ் கடுமையாகப்போராட வேண்டியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கோட்டையைப் பிடிப்பாரா அகிலேஷ் யாதவ்? ஜூன் 4ஆம் தேதி தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com