ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியானது அறிவிப்பு

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியானது.

News image
Updated On :11 மே 2024, 7:01 am

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதிய பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வெழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்களுக்கும் மே 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 11ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் பள்ளிகளில் சமா்ப்பித்து இருந்த உறுதிமொழிப் படிவத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணுக்கு தோ்வு முடிவுகள் அனுப்பி வைக்கவும், இணையதளங்கள் வாயிலாக தோ்வு முடிவை தெரிந்து கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தேர்வு முடிவுகளை dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாணவர்கள் தேர்வு முடிவுகளை dge.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று அங்கு TN XI Result 2024 அல்லது 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் 2024 என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து வரும் பக்கத்தில், மாணவர்களின் பதிவு எண், பிறந்த தேதி, கேப்சா கோடு ஆகியவற்றை சரியாக உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்தவும்.

மாணவரின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தெரியவரும். தேவைப்படின், அந்த தேர்வு முடிவை பதிவிறக்கம் மற்றும் பிரின்ட் எடுத்தும் வைத்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.