அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

இன்று அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள் என்று வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டியளித்தார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

மக்களவைத் தோ்தலில் 4-ஆம் கட்டமாக ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று (மே 13) வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தங்களது வாக்கினை செலுத்தினார்கள்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி
மெட்ரோ ரயில் நிறுவன ஊழியா் மீது தாக்குதல்: பின்னணி பாடகரிடம் விசாரணை

நடிகர் அல்லு அர்ஜுன் வாக்களித்த பின் செய்தியாளர்களுடன் பேசினார். அவர் பேசும் போது, "தயவுசெய்து வாக்களிக்கவும். வாக்களிப்பது நாட்டின் அனைத்து குடிமக்களின் பொறுப்பு. நம் வாழ்கையின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான மிக முக்கியமான நாள் இன்று. அதிக அளவிளான வாக்காளர்கள் வாக்களிக்க வருவதால், மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ளது.

நான் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் இணையவில்லை, அனைத்து கட்சிகளிடமும் நடுநிலையாக இருக்கிறேன்." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com