சுவாதி மலிவால் மீது தாக்குதல்: உரிய நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி உறுதி

சுவாதி மலிவால் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தில் உதவியாளர் மீது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி உறுதி
சுவாதி மலிவால்
சுவாதி மலிவால்
Published on
Updated on
1 min read

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மலிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி உறுதியளித்துள்ளது.

அரவிந்த் கேஜரிவால், பிஎஸ் வைபவ் குமார் மீது நடவடிக்கை எடுப்பார் என்றும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாதி மலிவால்
சென்னை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தனிவழி: கைவிட இப்படி ஒரு காரணமா?

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்துக்கு நேற்று காலை சுவாதி மலிவால் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும், இது குறித்து சுவாதி மலிவால் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், ஆம் ஆத்மி தரப்பில் எதுவும் சொல்லப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் இது குறித்து ஊடகத்தில் பேசியிருக்கிறார், இந்த சம்பவம் நடந்தது உண்மைதான, இது குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் நிச்சயம் கடும் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.

அதாவது, நேற்று காலை, அரவிந்த் கேஜரிவாலை சந்திக்க சுவாதி, அவரது இல்லத்துக்குச் சென்றுள்ளார். காத்திருப்பு அறையில் சுவாதி காத்திருந்தபோது அவரிடம் வைபவ் குமார் தவறாக நடந்துகொண்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரிய செயல். இந்த சம்பவத்தில் வைபவ் குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com