புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது பற்றி...
புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!
Published on
Updated on
2 min read

கரோனா வைரஸின் புதிய ஃபிலிர்ட் வகையான கேபி2 வைரஸால் கிட்டத்தட்ட 100 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மகாராஷ்டிரத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

புதிய கரோனா வைரஸின் ஒமிக்ரான் துணை வகை கேபி2 வைரஸால் 91 பேருக்கு நோய் பாதிப்புகளை மகாராஷ்டிர அரசு கண்டறிந்துள்ளது. இது முன்னர் நடைமுறையில் இருந்த ஜெஎன்1 வைரஸ் மாறுபாட்டைத் தாண்டி தற்போது பல்வேறு நாடுகளில் தொற்றுநோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஃபிலிர்ட் வகை கேபி2 வைரஸால் அதிகபட்சமாக புணேவில் 51 பேருக்கும், தானேவில் 20 பேருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் புதிய வகை வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. மேலும்,"உலகளாவிய பாதுகாப்புகள் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க உதவும், கரோனா வைரஸ் புதிய மாறுபாடுகளுடன் பரவ ஆரம்பித்துள்ளது" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு கே1, கே2 ,”ஃபிலிர்ட்” எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு உலகளவில் பரவிய ஒமிக்ரான் ஜெஎன்1-ன் வழித்தோன்றல்கள் ஆகும்.

அமெரிக்காவின் தொற்று நோய் சங்கத்தின் (ஐடிஎஸ்ஏ) அறிவுரையின் படி, மாறுபாடுகளுடன் கூடிய புதிய நோய்த் தொற்றால் மக்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய ராஜ்ஜியம், தென் கொரியா மற்றும் நியூசிலாந்திலும் ’ஃபிலிர்ட்’ எனப் பெயரிடப்பட்ட வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இது கரோனா தொற்றின் புதிய அலை பற்றிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மே 6 வரை, 238 பேர் கேபி-2 தொற்றாலும், 30 பேர் கேபி 1.1-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சார்ஸ் கோவி-2 ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய சார்ஸ் கோவி-2 ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டுகளின் எதிரொலியாக கரோனா வைரஸ் மீண்டும் உருவாகியுள்ளது. இது கரோனா வைரஸின் முந்தைய நிலையை போல், அழிவை ஏற்படுத்தாது. கேபி 1 மற்றும் கேபி 2 இந்த இரண்டு வைரஸ்களும் "ஃபிலிர்ட்" என அழைக்கப்படும் குழுவைச் சேர்ந்தவை.

இந்த வைரஸ் தொடர்ந்து உருவாகி கொண்டே இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், சமீபத்திய ஆய்வில் இந்த வைரஸ் குறித்து கவலைப்பட தேவையில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற முதல் நோய் பாதிப்பு கடந்த ஜனவரியில் அடையாளம் காணப்பட்டது. புணே, தானே, அமராவதி, ஔரங்காபாத், சோலாப்பூர், அகமதுநகர், நாசிக், லத்தூர் மற்றும் சாங்லியோன் ஆகிய இடங்களில் நோய் பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அறிகுறிகள்

புதிய மாறுபாட்டின் அறிகுறிகள் ஒமிக்ரானின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். தொண்டை புண், இருமல், குமட்டல், சோர்வு, தலைவலி, தசை அல்லது உடல் வலி, சுவை அல்லது வாசனை இழப்பு போன்றவைகளாகும்.

அறிகுறிகள் வரும்போது, இந்த மாறுபாடுகளில் புதியதாகவோ அல்லது வித்தியாசமாகவோ இருக்காது. ஆனால், அது தொற்று பாதிப்பு லேசானதாக இருப்பதனால் அல்ல. தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தொற்றுகளுக்குப் பிறகு, நமது நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பதுதான் முக்கிய காரணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com