சென்னையில் அண்மையில் உயிரிழந்த காகங்களுக்கு ஹெச்5என்1 வைரஸ் தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.
சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாள்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்த நிலையில், அவற்றுக்கு வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளில் ஆய்வு செய்த நிலையில், அவற்றுக்கு ஹெச்5என்1 தீநுண்மி (H5N1 வைரஸ்) தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.
இதனால், இறந்த பறவைகளை கையால் தொட வேண்டாம், உயிரிழந்த காகங்களை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க அல்லது எரிக்க வேண்டும். கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என கால்நடைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை, பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை எனவும் கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மகாராஷ்டிர மாநிலம், லாத்தூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சலால் 50-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன.
இந்நிலையில், பறவை காய்ச்சலால் (ஹெச்5என்1 தீநுண்மி தொற்று) காகங்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டது. காகங்கள் இறந்து கிடந்த இடங்களில் 10 கி.மீ. சுற்றளவுக்கு கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஹெச்5என்1 தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது விலங்குகளிடமிருந்து இந்நோய் மனிதர்களுக்கு பரவக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The presence of the H5N1 virus has been confirmed in the crows that died in Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடையில்லா பாசன வசதியை உறுதி செய்ய வேண்டும்: நீா்வளத் துறை அமைச்சா் என். ஆனந்த் வலியுறுத்தல்

கேரளத்தில் வேகமாகப் பரவும் ஷிகெல்லா தொற்று: வயநாட்டில் மேலும் 7 சிறாா்கள் பாதிப்பு

கேரளத்தில் நிபா வைரஸ் எச்சரிக்கை: ஒருவருக்குத் தொற்று பாதிப்பு!








