
மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட பிரசாரத்தின் கடைசி நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.
மக்களவைத் தேர்தல் 4 கட்டங்கள் நிறைவடைந்த நிலையில் ஐந்தாவது கட்டமாக மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் களம் காணும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஹரியாணாவில் இரண்டு பொதுக்கூட்டங்களிலும், தில்லியில் மூன்று பொதுக் கூட்டங்களிலும் இன்று பங்கேற்கிறார்.
ஹரியாணாவின் அம்பாலாவில் பிற்பகல் 2.45க்கும், பின்னர் சோனிபட்டில் மாலை 4.45 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். அதன்பின்னர், மாலை 6:30 மணிக்கு வடகிழக்கு தில்லியில் பேரணி நடத்துகிறார்.
ஐந்தாம் கட்ட தேர்தல் பிரசாரம் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் பலவிடங்களில் மும்முரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.