மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
/

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

News image

திருப்பதி (கோப்புப்படம்)

Updated On :18 மே 2024, 5:05 am

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகக் கோடை விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிய இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய, 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பக்தர்கள் அடைக்கப்படும் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பியதால், 5 கி.மீ தூரம் வரை வரிசையில் நின்று பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் காத்திருப்பு அறையில் நிற்கும் பக்தர்களுக்குத் தேவஸ்தானம் சார்ப்பில் நீர் மோர், உணவுகள் வழங்கப்படுகிறது. அதேபோல், ஆங்காங்கே நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.