மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்
பிரதமர் நரேந்திர மோடியை 'ஏழைகளின் மீட்பாளர்' என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவில் உள்ள ஏழைகளின் மீட்பாளர் "மெசியா" என்று வர்ணித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அவரின் தலைமையில் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருந்த சுமார் 25 கோடி மக்கள் அதிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஒடிஸா மாநிலம் சம்பல்பூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ரைராகோலேயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆதரித்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ”முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு தொடங்கி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் வரை, அனைவரும் நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்கத் தவறிவிட்டனர்.
இந்த நிலையில், நாட்டில் உள்ள ஏழை மக்களின் துயரங்களை நீக்கக்கூடிய முதல் பிரதமர் மோடி தான்.
கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு வீடு, குடிநீர் குழாய் இணைப்பு, இலவச சமையல் எரிவாயு, இலவச உணவு தானியங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட பலவற்றை வழங்கியுள்ளார் பிரதமர் மோடி.
விமர்சகர்களின் வாயை அடைத்து, வாக்குறுதியளித்தபடி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதை பாஜக உறுதி செய்துள்ளது. ராமர் தனது கோயிலுக்கு வந்துள்ளதால், இனி இந்தியாவில் ராமராஜ்ஜியம் நிறுவப்படும்” என்றார்.
மக்களுக்கு இலவச சுகாதார சேவையை வழங்கும் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை செயல்படுத்தாத ஒடிசாவின் பிஜு ஜனத தள (பிஜேடி) அரசாங்கத்தை ராஜ்நாத் சிங் கடுமையாக சாடினார்.
”மோடி அரசின் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மேலும் அதிகரிக்க தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். ஒடிசாவின் இந்த பரிதாப நிலைக்கு 50 ஆண்டுகள் காங்கிரஸும், 25 ஆண்டுகள் பிஜேடியும் ஆட்சி செய்தது தான் காரணம்.
உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ள பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் பேசி, இரு நாடுகளுக்கு இடையேயான போரை நான்கரை மணி நேரம் நிறுத்தினார். அப்போது 22,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் போரில் இருந்து மீட்கப்பட்டனர்.
மேலும் ஜி20 மாநாட்டின் போது ஒடிஸாவின் பெருமை மற்றும் கலாசாரத்தை மோடி எடுத்துரைத்தவர் மோடி" எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...