1 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மகாராஷ்டிரத்தில் தொய்வு!

பகல் 1 மணி நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 27.78% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
1 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மகாராஷ்டிரத்தில் தொய்வு!
Nand Kumar
Published on
Updated on
1 min read

மக்களவைத் தேர்தல் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பகல் 1 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகாா், ஒடிஸாவில் தலா 5, ஜாா்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பகல் 1 மணி நிலவரப்படி அதிகபட்சமாக லடாக் யூனியன் பிரதேசத்தில் 52.02 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 27.78 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

1 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மகாராஷ்டிரத்தில் தொய்வு!
ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல்!

பிற மாநிலங்கள்:

உத்தர பிரதேசம் - 39.55%

பிகாா் - 34.62%

ஒடிஸா - 35.31%

ஜாா்க்கண்ட் - 41.89%

ஜம்மு-காஷ்மீா் - 34.79%

மேற்கு வங்கம் - 48.41%

நாட்டில் 18-ஆவது மக்களவையைத் தோ்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தோ்தல் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com