ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல்!

மகாத்மா காந்தி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் ஆய்வு செய்தார்.
ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல்!
DOTCOM
Updated on
1 min read

ரேபரேலியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி ஆய்வு நடத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி மக்களவைத் தொகுதிக்கு இன்று 5-ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தில்லியில் இருந்து லக்னெள விமான நிலையத்துக்கு இன்று காலை வருகைதந்த ராகுல் காந்தி, சாலை வழியாக ரேபரேலிக்கு சென்றார்.

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல்!
சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

ஹனுமன் கோயிலில் தரிசனம் செய்த ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ரேபரேலி தொகுதிக்குள்பட்ட சில வாக்குச் சாவடிகளில் இன்று ராகுல் காந்தி செய்யவுள்ளார்.

DOTCOM

நாட்டில் 18-ஆவது மக்களவையைத் தோ்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தோ்தல் நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே ராகுல் காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான வயநாட்டில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com