‘கீழ்த்தரமான பேச்சு’: பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை!

பாஜக வேட்பாளர் அபிஜீத் கங்கோபாத்யாய மே 21 மாலை 5 மணிமுதல் 24 மணிநேரத்துக்கு பிரசாரம் செய்ய தடை.
கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய
கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாயANI

மேற்கு வங்க பாஜக வேட்பாளரும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான அபிஜீத் கங்கோபாத்யாய தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கடந்த மே 15-ஆம் தேதி பிரசார கூட்டத்தில் பேசிய தம்லுக் தொகுதி பாஜக வேட்பாளர் அபிஜீத், “மம்தா பானர்ஜி நீங்கள் எவ்வளவு விலைக்கு விற்பனையாகிறீர்கள்? உங்கள் விலை 10 லட்சம். ஏனென்றால் மேக்கப் போடுகிறீர்கள். நீங்கள் ஒரு பெண்ணா? என்று சில நேரங்களில் தோன்றுகிறது.” என்று தரகுறைவாக பேசியிருந்தார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய
போதையில் கார் ஓட்டி இருவர் பலியாக காரணமான சிறுவன்: நடந்தது என்ன?

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அபிஜீத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பெண்கள் குறித்து கீழ்த்தரமான கருத்தை பேசியதற்காக இன்று மாலை 5 மணிமுதல் 24 மணிநேரத்துக்கு அபிஜீத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டதாவது:

“இந்திய பெண்களை நேரடியாக அவமதிக்கக் கூடிய கருத்துகளை அபிஜீத் பேசியுள்ளார். மூத்த அரசியல் தலைவரும், பதவியில் இருக்கும் ஒரு பெண்ணை மட்டுமின்றி இந்தியாவின் எந்தப் பெண்ணை பற்றி இதுபோன்று பேசுவதும் கண்டனத்துக்குரியது.

பெண்களுக்கு மதிப்பளிக்கும் மேற்கு வங்கத்தின் பாரம்பரியத்துக்கு கலங்கம் மற்றும் அவப்பெயர் விளைவிக்கும் வகையில் அபிஜீத்தின் கருத்துகள் உள்ளன.

இத்தகைய அருவருப்பான வார்த்தைகளை கல்வி மற்றும் நீதித்துறை பின்னணியில் இருந்து வந்த அபிஜீத் பேசியது வேதனை அளிக்கிறது.” என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அபிஜீத் போட்டியிடும் தம்லுக் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com