ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தேன்; மீண்டும் செல்லத் தயார்: ஓய்வுபெறும் நீதிபதி

’37 ஆண்டுகளுக்கு முன்பு அமைப்பில் இருந்து ஒதுங்கினேன்’
சித்த ரஞ்சன் தாஸ்
சித்த ரஞ்சன் தாஸ்படம்: கொல்கத்தா உயர்நீதிமன்ற யூடியூப்
Published on
Updated on
1 min read

ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து தான் வந்ததாகவும், மீண்டும் செல்லத் தயாராக இருப்பதாகவும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஸ் பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற சித்த ரஞ்சன் தாஸ் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில், சித்த ரஞ்சன் தாஸ் ஓய்வுபெறுவதற்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்துகள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாவிடை நிகழ்ச்சியில் ரஞ்சன் தாஸ் பேசியதாவது:

“எனது உண்மையான அடையாளத்தை இன்று வெளிப்படுத்த நினைக்கிறேன். நான் ஒரு அமைப்புக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். எனது குழந்தைப்பருவம் முதல் இளைஞராகும் வரை அங்குதான் இருந்தேன். நான் தைரியமாகவும் நேர்மையாக இருக்கவும், மற்றவர்களை சமமான கண்ணோட்டத்தில் பார்க்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, எந்த வேலை செய்தாலும் தேசபக்தி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க அங்குதான் கற்றுக் கொண்டேன். நான் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்தேன் என்பதை இங்கே ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், 37 ஆண்டுகளுக்கு முன்பே அமைப்பில் இருந்து ஒதுங்கிவிட்டேன்.

எனது பணியின் முன்னேற்றத்திற்காக ஒருபோதும் அமைப்பின் அடையாளத்தை பயன்படுத்தியது இல்லை. ஏனெனில், அது எங்களின் கோட்பாட்டுக்கு எதிரானது. கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் என அனைவரையும் சமமாகதான் நடத்தினேன்.

நீதியை இரண்டு கொள்கைகளில் கீழ் வழங்க முயற்சித்தேன். ஒன்று அனுதாபம், மற்றொன்று நீதிக்காக சட்டத்தை வளைக்கலாம், ஆனால், சட்டத்துக்காக நீதியை வளைக்க முடியாது.” எனத் தெரிவித்தார்.

சித்த ரஞ்சன் தாஸ்
மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் பலி: தந்தை கைது!

ஒடிஸாவை சேர்ந்த தாஸ், கடந்த 1986-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். ஒடிசா நீதித்துறை சேவையில் 1999-ஆம் ஆண்டு தேர்வாகி, கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியை தொடங்கினார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஒடிஸா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2022-ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சர்ச்சைகள்...

கடந்த அக்டோபர் மாதம் தாஸ் அடங்கிய அமர்வு, இளம்பெண்கள் தங்களின் பாலியல் தூண்டுதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இளம்பருவ சிறுவர்கள் பெண்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறியது சர்ச்சையானது.

இந்த கருத்து “அனுமதியற்றவை மற்றும் மிகவும் ஆட்சேபனைக்குரியவை” என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com