டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மோடியின் ஓய்வுக்கு மறைமுக அறிவுரையா? அமித் ஷாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித் ஷா மகிழ்ச்சியாக இருப்பார் எனத் தெரிவதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

News image
Updated On :22 மே 2024, 5:09 am

DIN

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஓய்வு குறித்து பேசிய அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வுக்கு மறைமுகமாக அறிவுரை வழங்குகிறாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒடிஸா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “77 வயதாகும் நவீன் பட்நாயக், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வுபெற வேண்டும், பாஜக ஆட்சி அமைத்தால் ஒடியா மொழிப் பேசும் இளைஞரை முதல்வராக்குவோம்.” எனத் தெரிவித்தார்.

அமித் ஷாவின் கருத்தை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ப. சிதம்பரம்,

”வயது முதிர்வின்(வயது 77) காரணமாக நவீன் பட்நாயக் ஓய்வுபெற வேண்டும் என்று அமித் ஷா கூறியுள்ளார், ஒருவேளை பாஜக ஆட்சி அமைத்தால் மோடிக்கு(73 வயது 7 மாதங்கள்) விடுக்கப்பட்ட அறிவுரையா?

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித் ஷா மகிழ்ச்சியாக இருப்பார் எனத் தெரிகிறது. அவர் எதிர்க்கட்சித் தலைவராவார்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.